60 கோடிலாம் இல்லையாம்!! தனுஸ்ரீக்கு சாஹல் கொடுக்கும் விவாகரத்து ஜீவனாம்சம் தொகை இதுதான்..

Bollywood Indian Cricket Team Yuzvendra Chahal Divorce
By Edward Mar 20, 2025 10:30 AM GMT
Report

தனுஸ்ரீ - சாஹல்

2020 டிசம்பர் 22 ஆம் தேதி யூடியூபர், நடன இயக்குநர் மற்றும் பல் மருத்துவரான தன்ஸ்ரீ வர்மாவை யுஸ்வேந்திர சாஹல் திருமணம் செய்து கொண்டார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வந்த தன் மனைவியை 4 ஆண்டுகளுக்கு பின் இன்ஸ்டாகிராமில் இருந்து அன்ஃபாலோ செய்துள்ளார் யுவேந்திர சாஹல்.

60 கோடிலாம் இல்லையாம்!! தனுஸ்ரீக்கு சாஹல் கொடுக்கும் விவாகரத்து ஜீவனாம்சம் தொகை இதுதான்.. | Chahal Pays 4 75 Cr Alimony To Dhanashreeverma

யுஸ்வேந்திர சாஹல் தன் மனைவி தனஸ்ரீ வர்மாவை சட்ட ரீதியாக பிரிய நீதிமன்றத்தில் ஆஜராகினர். சட்டரீதியான நடைமுறைகள் அனைத்தும் முடிந்த நிலையில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருவருக்கும் இடையே இணக்கம் இல்லாததால் 18 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் பரஸ்பர சம்மத்துடன் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள் சாஹல் - தனஸ்ரீ.

60 கோடிலாம் இல்லையாம்!! தனுஸ்ரீக்கு சாஹல் கொடுக்கும் விவாகரத்து ஜீவனாம்சம் தொகை இதுதான்.. | Chahal Pays 4 75 Cr Alimony To Dhanashreeverma

ஜீவனாம்சம் தொகை

இந்நிலையில் தனஸ்ரீ வர்மா, ஜீவனாம்சமாக ரூ. 60 கோடி கேட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அவை எல்லாம் பொய்யான தகவல் என்பது தெரியவந்துள்ளது.

யுஸ்வேந்திர சாஹல் முன்னாள் மனைவி தனுஸ்ரீ வர்மாவுக்கு 4.75 கோடி ரூபாய் மட்டுமே ஜீவனாம்சமாக கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத்தொகை நீதிமன்றத்தில் முடிடு செய்யப்பட்டு அதில் பாதித்தொகையை அவர் ஏற்கனவே செலுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவர் தற்போது 2.37 கோடி ரூபாய் மட்டுமே தற்போது தனுஸ்ரீ வர்மாவுக்கு வழங்கியுள்ளாராம்.