பிரபல நடிகரை பார்க்க வந்த கட்டுக்கடங்காத கூட்டம்..கல்வீச்சில் சிக்கிய படகுழுவினர்!! நடிகை சொன்ன சம்பவம்..

Actors Bollywood Indian Actress Actress
By Jai May 31, 2026 07:00 AM GMT
Report

'கடி பதங்'

பாலிவுட் சினிமாவில் முதல் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர்தான் நடிகர் ராஜேஷ் கன்னா. இவர் நடிப்பில்1971ல் வெளியாகி மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக மாறியது தான் 'கடி பதங்' என்ற படம். இப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை ஆஷா பரேக், படத்தின் ஷூட்டிங்கில் நடந்த பரபரப்பான சம்பம் ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

பிரபல நடிகரை பார்க்க வந்த கட்டுக்கடங்காத கூட்டம்..கல்வீச்சில் சிக்கிய படகுழுவினர்!! நடிகை சொன்ன சம்பவம்.. | Cinema Stones Pelted At Rajesh Khanna Reason Why

பேட்டியொன்றில் கலந்து கொண்டு பேசிய ஆஷா பரேக், 55 ஆண்டுகளுக்கு முன் கடி பதங் படப்பிடிப்பின் ஜிஸ் கலி மே தேரா கர் என்ற சூப்பர்ஹிட் பாடலின் காட்சியை உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நைனிதாலில் நடந்தது. டாப் நடிகராக அப்போது விளங்கிய ராஜேஷ் கன்னாவை பார்க்க ஏரிப்பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.

பிரபல நடிகரை பார்க்க வந்த கட்டுக்கடங்காத கூட்டம்..கல்வீச்சில் சிக்கிய படகுழுவினர்!! நடிகை சொன்ன சம்பவம்.. | Cinema Stones Pelted At Rajesh Khanna Reason Why

கூட்டம் அலைமோதியதால், நடிகர் ராஜேஷ் கண்ணா, படக்குழுவினர் ஷூட்டிங் திட்டமிட்டிருந்த படகு வரைக் கூட செல்ல முடியாமல் மோசமான சூழல் ஏற்பட்டது. நேரல் செல்லச்செல்ல கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்றது.

பிரபல நடிகரை பார்க்க வந்த கட்டுக்கடங்காத கூட்டம்..கல்வீச்சில் சிக்கிய படகுழுவினர்!! நடிகை சொன்ன சம்பவம்.. | Cinema Stones Pelted At Rajesh Khanna Reason Why

கோபமான ரசிகர்கள்

ராஜேஷ் கன்னாவை பார்க்க முடியாததால் சில சமூக விரோதிகள் மற்றும் கோபமான ரசிகர்கள், திடீரென படப்பிடிப்பு தளம் மற்றும் படக்குழுவினரை நோக்கி கற்களை வீசி எறியத்தொடங்கினர்.

4 புறமிருந்தும் கற்கள் மழையாக பொழிந்ததால், ஒட்டுமொத்த படக்குழுவினரும், நடிகர், நடிகைகளும் பெரும் பீதிக்கும் பயத்திற்கும் உள்ளாகினோம். நிலைமை தீவிரமாக இயக்குநர் சக்தி சமந்தா, இப்படிப்பட்ட ஆபத்தான, அச்சுறுத்தலான சூழலில் படப்பிடிப்பை நடத்த முடியாது என்று முடிவெடுத்தார்.

பிரபல நடிகரை பார்க்க வந்த கட்டுக்கடங்காத கூட்டம்..கல்வீச்சில் சிக்கிய படகுழுவினர்!! நடிகை சொன்ன சம்பவம்.. | Cinema Stones Pelted At Rajesh Khanna Reason Why

நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுத்து, அவர் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தினார். பின் நைனிதால் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

அதன்பின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு சூழல் சீரடைந்ததை அடுத்து ஜிஸ் கலி மே தேரா கர் என்ற பாடல் படமாக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றியை அப்படம் பெற உதவியாக இருந்தது என்று நடிகை ஆஷா பரேக் தெரிவித்துள்ளார்.