என்னுடைய Bed-க்கு மட்டும் தான் ஆண் தேவை!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை தபு..
நடிகை தபு
காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டே உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை தபு. தற்போது பாலிவுட்டில் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

தற்போது தபு சொன்ன ஒரு கருத்து இணையத்தில் பரவி, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதில், படுக்கையறையை தவிர, தன் வாழ்க்கைக்கு ஒரு ஆண் தேவையில்லை என்று கூறியதாக செய்தி வெளியானது.
இந்த கருத்துக்கு இணையத்தில் பலவிதமான எதிர்ப்புகள் கிளம்பின. இப்படி தபு கூறிய தகவல் இணையத்தில் பரவி சர்ச்சைக்குரிய கருத்தாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் அவரே அதை மறுத்துள்ளார்.

முற்றுப்புள்ளி
நான் இதுபோன்ற எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை, எந்த ஊடகத்திலும் பேசவில்லை. இது முற்றிலுமான போலி செய்தி, இதுபோன்ற சர்ச்சையான செய்திகளை வெளியிடும்போது செய்தி ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்.
உண்மையா என்பதை தெளிவுப்படுத்திவிட்டு அதை பதிவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார் நடிகை தபு. 54 வயதாகும் தபு இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.