பிரித்தானியாவில் தீவிரமடையும் கொரோனா- அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

By Jon Dec 25, 2020 05:19 PM GMT
Report

பிரித்தானியாவில் உருமாற்றம் அடைந்து தீவிரமாகியுள்ள கொரோனாவுக்கு புதிதாக 7 அறிகுறிகள் தென்படுவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சீனாவில் கடந்தாண்டு உருவாகி உலக நாடுகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். இதுவரையிலும் 222 நாடுகளில் 7.9 கோடி பேரை தாக்கியுள்ளது, 17.48 லட்சம் மக்களை கொன்று குவித்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவில் உருமாற்றம் அடைந்து மிக தீவிர நிலையை எட்டி வேகமாக பரவுவதால் மக்கள் மேலும் அச்சத்தில் உள்ளனர். இந்த வைரஸ் புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருப்பதாக பிரிட்டன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கொரோனா அறிகுறிகளாக இருப்பவைகளுடன் சேர்த்து, சோர்வு, பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, மனக்குழப்பம், தசைவலி மற்றும் தோல் அரிப்பு ஆகிய 7 புதிய அறிகள் தென்படுவதாக அறிவித்துள்ளது.