முருகதாஸ் அப்படி செஞ்சுட்டாரு..வெளிப்படையாக பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா..
ராஷ்மிகா மந்தனா
இந்திய சினிமாவின் ஃபேமஸான நடிகையாகவும் நேஷனல் கிரஷாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. பாலிவுட்டிலும் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சல்மான் கானுடன் சிக்கந்தர் படத்தில் நடித்திருந்தார்.

படம் பெரிய வரவேற்பை பெறாமல் தோல்வியை சந்தித்தது. நீண்டகாலம் வெற்றியில்லாமல் தடுமாறிய முருகதாஸுக்கு சிக்கந்தர் படம் கம்பேக் கொடுக்கும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் வழக்கம்போல் தோல்வியே அவருக்கு கிடைத்தது.
சிகந்தர்
இந்நிலையில் சிகந்தர் படத்தினைன் பற்றி நடிகை ராஷ்மிகா மந்தனா ஓபனாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், சிக்கந்தர் படத்தின் கதையை என்னிடம் சொன்னது வேறுமாதிரி இருந்தது. வேறுமாதிரி எடுத்துவிட்டார் என்று ஓபனாக பேசியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஏற்கனவே படத்தின் தோல்விக்கு ஹீரோ லேட்டாக வந்ததால் தான் என்று முருகதாஸ் பேட்டியொன்றில் கூறியது பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.