விவாகரத்து எல்லாம் நாடகமா? விவாகரத்துக்கு பின் ஒரே வீட்டில் தனுஷ், ஐஸ்வர்யா..

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth
6 நாட்கள் முன்
Kathick

Kathick

தனுஷ் - ஐஸ்வர்யா

தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் என்பதை நாம் அறிவோம். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரு பிள்ளைகள் உள்ளனர். மகிழ்ச்சியாக வாழ்ந்த வந்த இருவரும், அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்களுடைய விவாகரத்தை சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர்.

இவர்களுடைய இந்த முடிவு, பலரையும் கஷ்டத்தில் ஆழ்த்தியது. விவாகரத்துக்கு பின் இருவரும் தங்களுடைய வேளையில் பிசியாக இருக்கிறார்கள். தனுஷ் நடிப்பிலும், ஐஸ்வர்யா இயக்குனராகவும் பணிகளை தொடர்ந்து வருகிறார்கள். விவாகரத்துக்குப்பின் இதுவரை இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை என்று பல செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, விவாகரத்துக்கு பின் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒரே வீட்டிக்கு அடிக்கடி சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், விவாகரத்துக்கு முன் இருவரும் ஆரியபுரத்தில் உள்ள ஃபிளாட் ஒன்றில் தான், குடியிருந்துள்ளார்கள். அந்த வீட்டிற்கு தான் தற்போது தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் அடிக்கடி சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி, அந்த வீட்டின் வாசலில் பொருத்தப்பட்டிருக்கும், அவர்கள் இருவரும் பெயர் பலகை கூட இன்னும் அங்கிருந்து அகற்றவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனால், விவாகரத்துக்கு பின் ஏன் இருவரும் ரசியமாக சந்தித்து வருகிறார்கள், என்று கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது. அதற்க்கு காரணம் என்ன என்பதை அவர்கள் இருவரும் தான் கூறவேண்டும்..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.