அவார்டுக்காக ஏங்குற பையன் தனுஷ் இல்ல!! விமர்சனத்திற்கு கஸ்தூரி ராஜா பதிலடி
72வது தேசிய திரைப்பட விருதுகள்
72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் தனுஷின் ராயம் மற்றும் கேப்டன் மில்லர் படத்திற்காக இரு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதனை கேள்விபட்டவர்கள் அதிகமான விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள்.

இரு படங்களில் வன்முறை காட்சிகள், ரத்தம் தெரிக்கும் காட்சிகள் தான் இருக்கிரது, இப்படிப்பட்ட படங்களுக்கு தேசிய விருது கொடுப்பது சரியா என்றும் கூறி வருகிறார்கள். இந்த விவகாரம் சோசியல் மீடியாக்களிலும் பரவிய நிலையில், தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.
கஸ்தூரி ராஜா
அதில், தனுஷுக்கு மீண்டும் தேசிய விருது கிடைத்தது ரொம்பவும் மகிழ்ச்சி. இந்த இரு விருதுகளுமே அவனுடைய உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். இதி அவன் எந்த இன்ஃப்ளூயன்ஸ் பண்ணவில்லை. இது அரசும், ஜூரி உறுப்பினர்களும் சேர்ந்து எடுத்த முடிவு, என் மகனுக்கு இந்த முறை இரு விருதுகள் கிடைத்தது எனக்கு ரொம்பவும் பெருமையான விஷயம்.

நாங்கள் விருது அறிவித்த அன்று தனுஷ் வீட்டுக்குதான் போய்க் கொண்டிருந்தோம். உடனே அங்க போய் இந்த சந்தோஷத்தை கேக் வெட்டி கொண்டாடினோம்.
விமர்சனம் எதற்காக வருதுன்னு எனக்கு தெரியல, அதற்கு நாம ஒன்னும் பண்ண முடியாது. தனுஷைவிட பெரிய நடிகர்கள் தமிழ்நாட்டில் எத்தனை பேர் இருக்காங்க? அவர்கள் முயற்சி செய்து இன்ஃப்ளூயன்ஸ் பண்ணி இந்த விருது வாங்கி இருக்க முடியாதா? இது தேர்வு குழுவின் முடிவு என்று நான் நினைக்கிறேன்.
மற்றபடி தனுஷுக்கு அவ்வளவு பெரிய புத்திசாலித்தனம் கிடையாது. எங்கேயாவது போய் 4 பேரை பார்த்து ஐயா எனக்கு இந்த அவார்ட் கொடுங்கன்னு கெஞ்சுறவர் கிடையாது. இப்போது தான் அவர் புதுசா அவார்ட் பாக்குறாரா என்ன? ஏற்கனவே ஆடுகளம் பொல்லாதவன், அசுரன் படத்துக்கு தேசிய விருது வாங்கியிருக்கிறார். அதற்குமுன் பல அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதனால் அவார்டுக்காக ஏங்குற பையன் தனுஷ் இல்லை. கொடுக்கிற அவார்ட்டை மகிழ்ச்சியாக ஏத்துக்கணும் என்று கூறியிருக்கிறார் கஸ்தூரி ராஜா.