தனுஷுக்கு ரொம்ப தைரியம் தான்.. ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தார்
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தான் என்றாலும் சமீப காலமாக பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். கடைசியாக ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆன மாறன் படம் மிக மோசமான விமர்சனங்களை சந்தித்தது.
அடுத்து தற்போது ஒரு ஹாலிவுட் படம் உட்பட கைவசம் நான்கைந்து படங்கள் வைத்திருக்கிறார் தனுஷ். இந்த படங்கள் அவரது கெரியரை தூக்கி நிறுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது தனுஷ் - செல்வராகவன் கூட்டணி சேர்ந்து இருக்கும் "நானே வருவேன்" படத்தின் ரிலீஸ் தேதி பற்றி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. அதே தேதியில் தான் பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட படமும் ரிலீஸ் ஆகிறது. அதனால் தனுஷால் அந்த போட்டியை சமாளிக்க முடியுமா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
தனுஷுக்கு ரொம்ப தைரியம் தான் என்கிற கமெண்டும் அதிகம் வருகிறது.
