இனிமே அந்த காரணம் எல்லாம் சொல்லக்கூடாது? விவாகரத்துக்கு பின் கேப்டனாக மாறிய தனுஷ்..

Dhanush
2 மாதங்கள் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், அசுரன், கர்ணன் போன்ற வெற்றிப்படங்களுக்கு பிறகு மாறன் என்ற தோல்வி படத்தினை கொடுத்தார். இப்படத்தின் தோல்விக்கு காரணம் தனுஷ் விவாகரத்து செய்ததால் கதைய சரியாக தேர்வு செய்வதில் குழப்பத்தில் இருந்ததாக கூறபட்டது.

இதையடுத்து அண்ணன் செல்வராகவனின் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்தும் வந்தார். விவாகரத்துக்கு பின் சில காலம் அமைதியாக எங்கும் தலைக்காட்டாமல் திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது.

ராக்கி, சாணிக்காயிதம் போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன், பான் இந்திய படமாக பல மொழிகளில் உருவாகும் கேப்டன் மில்லர் என்ற படம் மூலம் தனுஷை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வீடியோ மூலம் தெரிவித்தனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய சீக்கிரமே துவங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. விவாகரத்து செய்தியால் விட்டதை மீண்டும் எங்கள் அண்ணன் பிடிப்பார் என்று தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.