500 ரூபாய்க்கு விலைபோனேனா!! சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் போட்ட அறிக்கை..

Gossip Today Tamil Directors
By Jai Jul 17, 2026 02:45 PM GMT
Report

இயக்குநர் சற்குணம்

களவாணி, வாகை சூடவா, நையாண்டி, சண்டி வீரன், களவாணி 2, பட்டத்து அரசன் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் தான் இயக்குநர் சற்குணம். தற்போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

தேசிய விருது பெற்ற இயக்குநர் சற்குணம், வெறும் ரூ. 500 சந்தா தொகைக்கு, தான் விலைபோனதாக காரணம் காட்டி தன்னை வாக்களிக்கத் தகுதியற்றவர் என்று அறிவித்துள்ளர்.

500 ரூபாய்க்கு விலை

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் அறிக்கையில், வரும் ஜூலை 19 அன்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது.

அந்த சங்கத்தின் உறுப்பினரான எனக்கு ரூ. 500 சந்தா தொகை செலுத்தப்படவில்லை என்பதை நினைவூட்ட சங்க நிர்வாகத்திற்கு பல வழிகள் இருந்தும், அதை யாரும் தெரிவிக்கவில்லை.

நான் அந்த தேர்தலில் போட்டியிடும் என்னுடைய நண்பர் ஒருவர் மூலமாக நீங்கள் ரூபாய் 500 செலுத்துங்கள் நான் உங்களுக்கு தருகிறேன் என்று கூறி ரூ. 500 அவரிடன் கொடுத்துவிட்டேன். இச்சூழலில் ரூ. 500-கு நான் விலைபோனதாக கூறி என்னை வாக்களிக்க தகுதியில்லை என்று கூறி தகுதி நீக்கம் செய்திருப்பது தேசிய விருது, தமிழக அரசு விருது போன்ற பல விருதுகளை பெற்ற என்னை அவமதிக்கும் செயலாகும். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று குற்றம்சாட்டியுள்ளார் இயக்குநர் சற்குணம்.