சிவகுமாருக்கு பல்ப் கொடுத்த இயக்குனர் பாலா, அரங்கமே விழுந்து விழுந்து சிரித்தது

Sivakumar Suriya Bala
By Tony Dec 26, 2024 01:30 PM GMT
Report

பாலா

தமிழ் சினிமாவில் எப்போதும் தரமான படங்களாக எடுத்து வருபவர் இயக்குனர் பாலா. சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் 25 வருடங்களை சினிமாவி கடக்கின்றார்.

இதற்காக இவருக்கு ஒரு சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டு பாலாவை பாராட்டினர்.

அப்போது சிவகுமார் பாலாவுடன் ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார், அதில் சிவகுமார், தகதகவென ஆடா என் பாடலை ஏன் பிதாமகன் படத்தில் அத்தனை காமெடியாக வைத்தாய்.

அதையும் சூர்யாவை வைத்தே ஆட வைத்தாய், என்று கேட்க, அதற்கு பாலா, அந்த பாடலில் உங்கள் நடனத்தை பார்க்க எனக்கு செம நகைச்சுவையாக இருக்கும் என சொல்ல அரங்கமே விழுந்து விழுந்து சிரித்தது.

உடனே சிவகுமார் அடப்பாவி என்னை இப்படி டேமேஜ் பண்ணிட்டியே என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.