டிராகன் வசூல் வேட்டை.. அஜித்தின் விடாமுயற்சி சாதனை முறியடிப்பு
Ajith Kumar
Pradeep Ranganathan
VidaaMuyarchi
Dragon
By Kathick
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான டிராகன் திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து வசூல் வேட்டையாடி வருகிறது.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தார். ரூ. 37 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானது.
அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் ஆகியோர் இப்படத்தில் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.
இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வந்தது. இந்த நிலையில், வட அமெரிக்காவில் மட்டுமே $950K+ வசூல் செய்துள்ளது.
இதன்மூலம் வட அமெரிக்காவில் மட்டும் விடாமுயற்சி படத்தின் வசூல் சாதனையை டிராகன் முறியடித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.