என் கணவர் அந்த காட்சியை பார்த்து!.. பாரதி கண்ணம்மா வில்லி வெண்பா ஓப்பன் டாக்..

தொலைக்காட்சி தொடரில் மிகவும் சுவாரஷ்யமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பிரபல தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா தொடர்தான். லாஜிக்கே இல்லாம ஏன் இந்த இயக்குநர் கண்ணம்மாவை இப்படி நடிக்க வைக்கிறார் என்று பல ரசிகர்களின் குமுரலாக இருந்து வருகிறது.

அதிலும் பாரதிக்கு தோழியாக இருந்து அனைத்து சூழ்ச்சிகளை செய்யும் வெண்பா கதாபாத்திரம் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்றி வருவது தெரிந்த ஒன்றே. எங்கு சென்றாலும் தன்னை திட்டுவதாகவும் அதனால் மகிழ்ச்சியடைகிறேன் என்று தான் பிரபலமாகிவிட்டதாகும் மேடையில் சமீபத்தில் கூறியிருந்தார்.

சில வாரங்களாக டிஆர்பியில் எகிரவைத்து வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஃபரினா அசாத்திற்கு சிறந்த வில்லி விருதினையும் பெற்றார். இந்த வார காட்சியில் வெண்பா அஞ்சலியின் வயிற்றில் இருக்கும் குழந்தையை அழிக்க திட்டம் தீட்டும் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதுபற்றி ரசிகர்கள் அவர்களிடம் நேரிடையாகவே கேட்டும், மீம்ஸ் கிரியேட் செய்தும் வருகிறார்கள். எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்கள் என வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், லைவ் சாட்டில் ரசிகர்களுடன் பேசிய ஃப்ரீனா சில கேள்விகளுக்கு பதிலளித்து பகிர்ந்தும் உள்ளார்.

வில்லி காட்சிகளை உங்கள் கணவர் பார்த்து என்ன கூறுவார் என்று கேட்டுள்ளார் ஒரு ரசிகர். அதற்கு என்னை பார்த்து சிரிப்பார் என்று கூறி காமெடியாக பதிலளித்துள்ளார் ஃபரீனா அசாத்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்