நடிகருடன் ஆடையில்லா காட்சி!! பாதியில் ரிப்பேர் ஆன கேமரா!! பிரபல நடிகை ஓபன் டாக்..
புளோரன்ஸ் பக்
சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களுக்கு அதிகளவில் சிஜி காட்சிகளை பயன்படுத்தாமல் கேமரா ட்ரிக்ஸ் வைத்தே தற்போதும் படங்களை கொடுக்க முடியும் என்று நிரூபித்து வருகிறார் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். தி ஒடிஸி படம் 2 நாட்களிலேயே ரூ. 2500 கோடி பட்ஜெட்டைவிட அதிக வசூலை ஈட்டி வருகிறது.

இந்தியாவில் கிட்டத்தட்ட ரூ. 100 கோடி வசூலை எட்டவுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க தி ஒடிஸி படத்திற்கு முன் அறிவியல் தந்த ஓபன்ஹைமரின் பயோபிக் படத்தை நோலன் இயக்கும் போது நடந்த நிர்வாண காட்சி பற்றி பிரபல ஹாலிவுட் நடிகை புளோரன்ஸ் பக் வெளிப்படையாக கூறிய விஷயம் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஓபன்ஹைமர் படத்தின் தமக்கும் சிலியன் மர்பிக்கும் இடையேயான அந்தரங்க காட்சியில் கேமரா ரிப்பேர் ஆனதாகவும் இதனால் இருவரும் அதை சரிசெய்யும் வரை ஷூட்டிங் ஸ்பாட்டில் அதே நிர்வாண கோலத்தில் காத்திருந்ததாகவும் நடிகை புளோரன்ஸ் பக் தெரிவித்துள்ளார்.

ஆடையில்லா காட்சி
அவர் கூறுகையில், எங்கள் நெருக்கமான காட்சியின் நடுவில் கேமரா பழுதடைந்தது யாருக்கும் தெரியாது. ஆனால் அதுதான் நடந்தது. நாங்கள் இருவரும் ஆடைகள் இல்லாமல் இருந்தபோது கேமரா பழுதடைந்தது. அது தடைசெய்யப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் என்பதால் அந்த சூழல் மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.
தொழில்நுட்பக் குழுவினர் சாதனங்களை பழுதுபார்க்கும் வரை நானும் மர்பியும் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த எதிர்பாராத இடைவேளையில் அமைதியாக இருக்க விரும்பாமல் அதை ஒரு பாடமாக மாற்றியது.
சரி இந்த கேமராவில் என்ன பிரச்சனை என்று எனக்கு சொல்லுங்கள் என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது, கேமராவிற்கு ஒளி சென்ற விதம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை என்று இயக்குநர் கிறிஸ்டோபர் நோல கூறினார். ஓபன்ஹைமர் குழுவினரின் அர்ப்பணிப்பையும் திறமையையும் வெளிப்படுத்தியது என்றும் அது எனக்கு கிடைத்த பெருமை என்றும் புளோரன்ஸ் பக் தெரிவித்திருக்கிறார்.