என் நடிப்பை கிண்டல் செஞ்சாங்க..ஆனா இப்போ!! நடிகை ராஷ்மிகா மந்தனா எமோஷனல் ஸ்பீச்...

Vijay Deverakonda Rashmika Mandanna Indian Actress Telangana Actress
By Edward Mar 20, 2026 09:00 AM GMT
Report

ராஷ்மிகா மந்தனா

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் நடித்து டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகியாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகவுள்ள நிலையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ராஷ்மிகா.

என் நடிப்பை கிண்டல் செஞ்சாங்க..ஆனா இப்போ!! நடிகை ராஷ்மிகா மந்தனா எமோஷனல் ஸ்பீச்... | Gaddar Film Awards 2025 Rashmika Mandanna Speech

திருமண நிகழ்ச்சிகளுக்கு பின் தன்னுடைய படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார் ராஷ்மிகா. இந்நிலையில், தெலுங்கானா கட்டர் ஃபிலிம் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் ராஷ்மிகா.

தி கேர்ள் ஃபிரெண்ட் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினை ராஷ்மிகா பெற்றுள்ளார். விருதை பெற்றப்பின் பேசிய ராஷ்மிகா, எமோஷனலாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

என் நடிப்பை கிண்டல் செஞ்சாங்க..ஆனா இப்போ!! நடிகை ராஷ்மிகா மந்தனா எமோஷனல் ஸ்பீச்... | Gaddar Film Awards 2025 Rashmika Mandanna Speech

கிண்டல் செஞ்சாங்க

அதில், ஒரு காலத்தில் என் நடிப்பிற்காக கிண்டல் செய்யப்பட்டேன். இப்போது என் நடிப்பிற்காக விருது கிடைத்துள்ளது. மிகப்பெரிய பாதையை கடந்து வந்ததை போன்று உணருகிறேன்.

தி கேர்ள் ஃபிரெண்ட் படம் மாதிரியான படத்திற்காக விருது கிடைத்துள்ளது மிகச்சிறப்பானது. ஏனென்றால் அது போன்ற நிறைய படங்கள் வருவதை அது ஊக்குவிக்கும், இப்படத்தை கொடுத்த ராகுலுக்கு நன்றி என்று ராஷ்மிகா பேசியிருக்கிறார்.