என்னடா பண்ணி வெச்சி இருக்கீங்க.. சுட்டி டிவி ரைம்ஸ் மாதிரி இருக்குடா!! விஜய்யின் கோட் பாடலை வெச்சு செய்த இளம்பெண்..
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் கோட். முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தனர். சமீபத்தில் கோட் படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் சில நாட்களுக்கு வெளியானது. யுவன் சங்கர் ராஜா இசையில் மதன் கார்க்கி வரிகளில் விசில் போடு என்ற பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த பாடல் வெளியானது முதல் தற்போது வரை 30 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது. ஆனால் இந்த பாடல் யுவன் இசை போன்றில்லை என்று பலர் விமர்சனம் செய்தும் கருத்துக்களை கலாய்த்தபடி பகிர்ந்தும் வருகிறார்கள். அந்தவகையில் ஒரு இளம் பெண் காருக்குள் பாடலை கேட்டுவிட்டு புலம்பும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்படியொரு வீடியோ வெளியிட்டால் என்னை விஜய் ரசிகர்கள் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுவார்கள், அப்படி திட்டினாலும் பரவாயில்லை. உங்கள் உள்மனசுக்கே தெரியும் இது ஒரு மொக்கையான பாடல். ஏஜிஎஸ் நிறுவனம் தயவுசெய்து யுவனுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி சம்பளத்தை கொடுத்துவிடுங்கள்.
விஜய் ரசிகை அல்லாத தனக்கே இந்த பாடல் மோசமாக வந்திருப்பது வருத்ததை ஏற்படுத்தி இருக்கிறது. மதன் கார்க்கிக்கும் சம்பள பாக்கி கொடுங்கள், சோகத்திலேயே பாட்டை எழுதி இருக்காரு என்று அந்த இளம் பெண் அப்பாடலை கழுவி ஊற்றியிருக்கிறார்.
இவ்ளோ அழகான பொண்ண
— Natarajan (@natarajan333) April 16, 2024
ஒத்த பாட்டுல அழுது பொலம்ப விட்டீங்களேடா?
சுட்டி டிவில குழந்தைங்க ரைம்ஸ் மாதிரி இருக்குனு சொல்லுது ????
என்ன னா இதெல்லாம் @actorvijay @vp_offl #VidaaMuyarchi #GoodBadUgly pic.twitter.com/1UprDAapJw