அந்த காட்சிக்கு மட்டும் 45 டேக்.. திவ்யபாரதி ஏன் அப்படி பண்ணாரு தெரியவில்லை!! ஜிவி பிரகாஷ் பேட்டி
கடந்த 2021 -ம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான படம் தான் பேச்சுலர். டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் திவ்ய பாரதியுடன் ஜிவி பிரகாஷ் மிகவும் நெருக்கமாக நடித்திருப்பார்.
மீண்டும் இவர்கள் கூட்டணியில் கிங்ஸ்டன் என்ற படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தை கமல் பிரகாஷ் இயக்குகிறார்.
இந்நிலையில் ஜிவி பிரகாஷ் கொடுத்த பழைய பேட்டி சோசியல் மீடியாவில் காட்டு தீ போல் பரவி வருகிறது. அதில் அவர், பேச்சுலர் படத்தில் திவ்ய பாரதி என்னிடம், "நீ என்ன லவ் பண்றியா?" என்று கேட்டுக்கும் காட்சி இருக்கும். அந்த காட்சி பெங்களூரில் உள்ள ஒரு பிஸியான ஸ்ட்ரீட்டில் படமாக்கப்பட்டது.
இந்த காட்சிக்கு மட்டும் திவ்ய பாரதி 45 டேக் எடுத்தார். பல போல்டான சீன்களையே அசால்ட்டாக நடித்த திவ்ய பாரதி, அந்த காட்சியில் மட்டும் ஏன் அத்தனை டேக் எடுத்தார் என்று தெரியவில்லை என ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
You May Like This Video