பட்டதெல்லாம் போதும்! இனிமே கார் ஓட்டவே மாட்டேன் - யாஷிகா ஆனந்த்..

yashikaanand tamilactress caraccident
By Edward Dec 16, 2021 03:00 PM GMT
Report

பிக்பாஸ் 3 சீசன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு பிறகு பிக்பாஸ் மூலம் நல்ல வரவேற்பு பெற்ற யாஷிகா சில படங்களில் கதாநாயகியாக நடித்து வந்துள்ளார்.

5 மாதத்திற்கு முன்பு அமெரிக்காவில் இருந்து வந்த தோழி உள்ளிட்ட நண்பர்களுடன் பார்ட்டி முடித்துவிட்டு வரும் வழியில் கார் விபத்தினை ஏற்படுத்தினார்.

இதனால் சம்பவ இடத்திலேயே தொழி இறக்க மற்றவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். படுகாயத்துடன் 4 மாதங்களாக படுத்த படுக்கையில் இருந்தார் யாஷிகா.

தற்போது எழுந்து நடந்து பழைய நிலைக்கு வந்துள்ளார். இந்நிலையில் ரசிகர்களும் நேரலையில் வீடியோ கால் மூலம் பேசிய யாஷிகாவிடம் பலர் இனிமேல் கார் ஓட்டாமல் இருங்கள் என்று கூறி வந்துள்ளனர். இதனால் யாஷிகா இனிமேல் கார் ஓட்டப்போவதில்லை என்ற முடிவினை கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

Gallery