திருமணத்தில் அக்காவுக்கு முத்தம் கொடுத்தது இதற்கு தான்!! ரோபோ சங்கர் மருமகன் ஓப்பன் டாக்..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, பிகில் உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு தன்னுடைய மாமாவும் அம்மாவின் தம்பியுமான கார்த்திக்கை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளார்கள் என்றும் செய்திகள் வெளியாகி புகைப்படங்களும் வெளியானது.
அதன்பின் சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இருவருக்கும் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பல முன்னணி நட்சத்திரங்கள் வந்திருந்த நிலையில், திருமணத்தின் போது ரோபோ சங்கரின் மனைவிக்கு இந்திரஜா கணவர் உதட்டில் முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து இணையத்தில் விமர்சித்து வந்த நிலையில், கார்த்திக் இந்த சர்ச்சை குறித்து பேசியிருக்கிறார்.
ஒரே திருமண நிகழ்ச்சியில் விஜய் மனைவி சங்கீதா - நடிகை கீர்த்தி சுரேஷ்.. பல ஆண்டு கழித்து நடந்த சம்பவம்
தன் வெட்டிங் ரிசப்ஷனில் தன் மாமியார்(அக்காவுக்கு) கன்னத்தில் முத்தமிட வந்த போது திடீர் என்று அவர் திரும்பியதால் உதட்டில் பட்டுவிட்டது. இது எதிர்பாராமல் நடந்த ஒரு விசயம் என்று தெளிவாக கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் இந்திரஜா கணவர் கார்த்திக்.