ஒரே திருமண நிகழ்ச்சியில் விஜய் மனைவி சங்கீதா - நடிகை கீர்த்தி சுரேஷ்.. பல ஆண்டு கழித்து நடந்த சம்பவம்
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அப்படத்தின் ஷூட்டிங்கிற்காக சமீபத்தில் ரஷ்யா சென்றிருக்கிறார் நடிகர் விஜய். இடையில் அரசியல் பற்றிய வேலைகளில் ஈடுபட்டு வரும் விஜய், சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டதால் மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.
விஜய்யின் செயல்பாடுகள் சங்கீதாவிற்கு பிடிக்காமல் போனதால் தனியாக வாழ்ந்து வருவதாகவும் வெளியில் தலைக்காட்டாமலும் இருந்து வருகிறார் சங்கீதா. இந்நிலையில் சில தினங்களுக்கு நடந்து முடிந்த இயக்குனர் சங்கர் மகள் ஐஸ்வர்யா - தருண் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அந்நிகழ்ச்சிக்கு விஜய்க்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, ரஷ்யாவில் விஜய் இருப்பதால் அவரால் வரமுடியவில்லை என்று கூறப்பட்டது.
இதனைதொடர்ந்து ஷங்கர் மகள் திருமணத்திற்கு விஜய் மனைவி சங்கீதா தன் தோழிகளுடன் சென்றிருக்கிறார். அவர் எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது. மேலும், விஜய்யுடன் நடிக்கும் போது கீர்த்தி சுரேஷை வைத்து கிசுகிசு எழுந்தது. தற்போது நடிகை கீர்த்தி சுரேஷும் ஷங்கர் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார்.
ஷங்கர் குடும்பத்துடன் எடுத்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து சங்கீதா, கீர்த்தி சுரேஷ் ஒரே நிகழ்ச்சிக்கு சென்றிருப்பதை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். இருவரும் சந்தித்து பேசினார்களா? இல்லையா? என்ற கேள்விகளும் இணையத்தில் எழுந்து வருகிறது.