அரசியல விட்டுட்டு சினிமா கேக்குதா! உங்க தகுதிக்கு சூர்யா பக்கம் போக கூடாது!
தமிழ் சினிமாவில் தற்போது பெரிய வெற்றி கொடுத்துள்ள படம் ஜெய் பீம். சூர்யா தயாரித்து நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதற்கு வன்னியர் சமுகத்தை படத்தில் நடிகர் சூர்யா இழிவுப்படுத்தியுள்ளதாக பாமக கட்சி்யின் இளைஞர் அணி தலைவரான அன்புமணி சூர்யாவை மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து இந்த பிரச்சனை அதிகரிக்க தற்போது வன்னியர் சங்கம் சார்ப்பாக வழக்கறிஞர் ஒருவர் சூர்யா மீது புகாரளித்திருந்தார்.
அதில் ஜெய் பீம் படக்குழு மன்னிப்பு கேட்பதோடு, 5 கோடி இழப்பீடு தரவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் பல ரசிகர்கள் சூர்யாவிற்கு ஆதரவாக பேசி வரும் நிலையில் சினிமா பிரபலங்களும் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். தற்போது இயக்குநர் பாரதிராஜா திரைப்பதிவாக்கம் செய்த உரிமையில் பேசுகிறேன், திரைத்துறை என்பது அனைத்தையும் பேசக்கூடியது.
மனித வர்க்கம் எதை சந்திக்கிறதோ அதை படம்பிடித்து மக்களிடம் காட்டக்கூடியது. நல்வழிப்படுத்தவே கதாநாயகன் நல்லவனாக சித்தரிக்கப்படுகிறான். இது மக்கள் முன் வரும் போது தவறா சரியா என அவர்களே ஏற்கிறார்கள் இல்லை புறந்தள்ளி விடுகிறார்கள். சமுகத்தில் எதாவது ஒரு பயன் தரும் என்று ஜெய் பீம் படத்தினை இயக்குநர் ஞானவேல் படமாக்கியுள்ளார். எளியவருக்கான போராட்டத்தின் படைப்பாக பார்க்காமல் பூதக்கண்ணாடி போட்டு குற்றம் பார்க்கத்துவங்கினால் அது பேசாமல் முடங்கி விடும்.
சூர்யா யாரையும் காயப்படுத்தும் தன்மையை கொண்டவராக இல்லை. அதற்கு இயக்குநருக்கு உதவியாக தன்னையும் நிழலையும் தந்திருக்கிறார். அவரை ச்முகத்தில் எதிரானவர் என்று சித்தரிப்பதை விடுத்து வன்முறையையும் விடுத்து நல்ல படைப்புகளை அதிகம் கொண்டு செல்ல உதவுங்கள். சினிமாவை கவனம் செலுத்துவதை விட இங்கு கவனம் செலுத்தவும் சமுக மாற்றங்களுக்கான போராட்டங்களும் உங்களுக்கு நிறையவுள்ளது. மற்ற விஷயங்களுக்கு உங்கள் குரல் ஒலிக்கட்டும். எங்களை விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார் பாரதிராஜா.