கர்ப்பமாக இருப்பதுபோல் உணர்கிறேன்..இதான் காரணம்!! நடிகை ஜனனி அசோக் குமாரின் பதிவு..
ஜனனி அசோக் குமார்
சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஜனனி அசோக் குமார், மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.
மேலும், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயம் எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து பின் அதிலிருந்து விலகினார். வேற மாறி ஆபீஸ் எனும் வெப் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கர்ப்பமாக இருப்பதுபோல் உணர்கிறேன்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி, கர்ப்பமாக இருப்பது போல் உணர்கிறேன், ஏனென்றால் என் தோழியின் வளைகாப்பு விழாவில் ஒரு தட்டு நிறைய பிரியாணி சாப்பிட்டப்பின் என்ற கேப்ஷனை பகிர்ந்துள்ளார்.
அதோடு, கர்ப்பமாக இருப்பவர்கள், எப்படி கையை வயிற்று பகுதியை பிடித்து போட்டோஸ் எடுப்பார்களோ அப்படி புகைப்படத்தை எடுத்து பகிர்ந்திருக்கிறார். இதற்கு பலரும் தங்களின் ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.
