நடிச்சது 10 படம் கூட இல்ல.. இத்தனை கோடியில் பிரம்மாண்ட வீட்டை வாங்கிய ஸ்ரீதேவி மகள்..
இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக 80களில் இருந்து கொடிக்கட்டி பறந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வட இந்திய தென்னிந்திய படங்களில் நடித்து வந்தார்.
முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கி வந்த ஸ்ரீதேவி சில ஆண்டுகளுக்கு முன் துபாயில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இறப்பதற்கு முன் தன் இரு மகள்களான ஜான்வி கபூர், குஷி கபூரை சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
அம்மா இறந்தப்பின் தடக் என்ற படத்தில் மூத்த மகள் ஜான்வி கபூர் அறிமுக நடிகையாகியானர். அதன்பின் கோஸ்ட் ஸ்டோரிஸ், தி கார்கில் கேர்ஸ், ரோஹி, குட்லக் ஜெர்ரி என்ற படங்களில் நடித்து வந்தார் சமீபத்தில், மிலி என்ற படமும் அவர் நடிப்பில் வெளியானது.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ஜான்வி கபூர் கிளாமர் புகைப்படங்களின் லைக்கால் காசு சம்பாதித்தும் வருகிறார். இந்நிலையில் ஜான்வி கபூர், மும்பை பாந்த்ரா பகுதியில் பிரம்மாண்ட வீட்டினை வாங்கியிருக்கிறாராம்.
சுமார் 65 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த வீடு 6,241 சதுராடி பரப்பளவு கொண்டுள்ளதாம். இந்த வீட்டிற்காக ஸ்டாம் டியூட்டிக்கு மட்டும் 3.90 கோடி கொடுத்திருக்கிறாராம் ஜான்வி கபூர்.
10 படம் கூடாத, முன்னணி நடிகை என்ற இடத்தை பிடிக்காத இளம் வயது ஜான்வி கபூர் எப்படி இத்தனை கோடியில் சம்பாதித்து வீடு வாங்க முடியும் என்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.