ஆஸ்திரேலியா அணியை திணறடிக்கும் பும்ரா!! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஜஸ்பிரித் பும்ரா
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரருமான ஜஸ்பிரித் பும்ரா தற்போது டாப் பவுளர் என்ற இடத்தினை பிடித்துள்ளார். அவருக்காக பல நிறுவனங்கள் விருதுகளை அறிவித்து பாராட்டி வருகிறார்கள்.
தற்போது ஆஸ்திரேலியா அணியினரை தன்னுடைய பவுளிங் மூலம் திணறடித்து வருகிறார். பிசிசிஐ-ன் A+ வீரரான பும்ராவுக்கு ஒரு ஆண்டுக்கு 7 கோடி சம்பளமாக கொடுக்கிறார்கள். ஒவ்வொரு பார்மேட்டிற்காக போட்டி கட்டணமும் அவர் பெற்று வருகிறார்.
மொத்த சொத்து மதிப்பு
2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஒப்பந்தத்தின்படி 18 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. Dream11, Asics, OnePlus உள்ளிட்ட நிறுவனங்களின் ப்ராண்ட் அம்பாஸ்டராக இருந்தும் ஒரு விளம்பரத்திற்காக 1. 5 கோடி முதல் 2 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.
மும்பையில் 2 கோடி மதிப்பிலான ஆரம்பர வீடும், அகமதாபாத்தில் 3 கோடி மதிப்பில் உள்ள ரியல் எஸ்டேட்டும் இருக்கிறது. 2024ன் படி பும்ராவின் நிகர சொத்து மதிப்பு 60 கோடி இருப்பதாக கூறப்படுகிறது.