வரதட்சணையால் தடுமாறிய வாழ்க்கை! அஜித்தின் ரீல் அம்மாவிற்கு ஏற்பட்ட துயரம்.. REWIND
தமிழ் சினிமாவில் 70களில் கொடிக்கட்டி பறந்த சில நடிகைகள் தற்போது எங்கே போனார்கள் என்று கூறும் அளவிற்கு ஆளே காணாமல் சென்று விடுகிறார்கள். அதில் ஒருசிலர் மட்டுமே சின்னத்திரை, குணச்சித்திர கதாபாத்திரம் என நடித்து வருகிறார்கள்.
அதில் முக்கிய நடிகையாக இருப்பவர் நடிகை ஜெயசித்ரா. கே பாலச்சந்தர் உருவாக்கி நடிகையில் இவரும் ஒருவர். அரங்கேற்றம் படத்தில் ஆரம்பித்து அடுத்தடுத்த படங்களில் 70களில் இருந்து கொடிக்கட்டி பறந்து வந்தார் ஜெயசித்ரா.
அவருடன் சேர்ந்து நடித்த சுதாகர் இருவருக்கும் காதல் ஏற்பட்ட திருமணம் வரை சென்றது. பணத்தில் அதிக சம்பளம் வாங்கிய ஜெயசித்ராவிடம் வரதட்சணை கேட்டுள்ளார் சுதாகர். இதனால் இருவரும் பிரிந்து 1983ல் கனேஷ் என்பவரை திருமணம் செய்தும் படங்களில் நடித்து வந்தார்.
நடிகர் விஜய்யின் செல்வா படத்தில் போலிஸ் ஆபிஸராகவும், நடிகர் அஜித்தின் பிளாப் படமான ராசி படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார். கணவர் இறந்த நிலையில் மகனுடன் வசித்து வருகிறார். தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை ஜெயசித்ரா.