நடிகையிடம் ஜோக்ஸ் போட்ட மோகன்லால்!! மூஞ்சுக்கு நேராக கேட்டு மன்னிப்பு கேட்கவைத்த நடிகை...
மலையாள சினிமாவில் பல ஆண்டுகளாக குணச்சித்திர ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருபவர் தான் நடிகை ஜாலி ஈஷோ. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் நடிகர் மோகன்லாலுடன் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

ஜாலி ஈஷோ
அதில், தன்னுடைய நீண்டகால திரைப்பயணத்தில் எந்த நடிகராலும் தனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டதில்லை, ஆனால் ஆரம்பகாலத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்தபோது மட்டும் ஒரு விஷயம் எனக்கு மிகவும் அசெளகரியத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில், மோகம்லால் எப்போது ஜாலியாக அனைவரையும் கேலி செய்து பேசுவது வழக்கம். தன்னுடன் முதல்முறையாக நடித்தபோது தொடர்ந்து கமெண்ட் அடித்துக் கொண்டே இருந்தார். அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் சங்கடமாக இருந்தது.

அப்போது படப்பிடிப்பு தளத்தில் தாம் மட்டுமே பெண்ணாக இருந்ததால் அந்த சூழல் இன்னும் அசெளகரியத்தை கொடுத்தது. இருப்பினும் அந்த சம்பவத்தை மனதில் வைக்காமல், அதன்பின்பும் மோகன்லாலுடன் பல படங்களில் நடித்தேன். ஒரு படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது, இனியும் இதுபோன்று புதிதாக வரும் நடிகைகளிடம் கேலியாக பேச வேண்டாம் என்று மோகன்லாலிடம் நேரடியாக கூறிவிட்டேன்.
மோகன்லால் மன்னிப்பு
நான் திருமணமானவள், எனக்கே உங்களின் கேலிப்பேச்சுகள் அசெளகரியமாக இருந்தது. அப்படியிருக்கையில் புதிதாக சினிமாவுக்கு வரும் இளம் நடிகைகளுக்கு அது எவ்வளவு மன அழுத்தத்தை கொடுக்கும் என்று யோசியுங்கள்.

அவர்கள் இயல்பாக பழகும்வரை இதுபோன்ற கமெண்ட்ஸ்களை தவிர்க்கலாம் என்று அவரிடம் கூறியதாகவும் அதன்பின் மோகன்லால் தவறை உணர்ந்து சாரி என்று மன்னிப்பு கேட்டதாகவும் நடிகை ஜாலி ஈஷோ தெரிவித்துள்ளார்.