மாதம்பட்டி ரங்கராஜின் கார்பன் காப்பி.. குழந்தையின் போட்டோவை பகிர்ந்த ஜாய் கிரிசில்டா!
மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜ், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இந்நிகழ்ச்சிக்கு முன் சில படங்கள் நடித்தாலும் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

அதன்பின் தனக்கு தெரிந்த சமையல் தொழிலில் களமிறங்கியவர் அதில் குறைந்த நேரத்திலேயே பெரிய வெற்றியை கண்டார். இப்போது வெளிநாடுகளிலும் தனது தொழிலை பிரபலப்படுத்தியுள்ளார்.
சொந்த தொழில் மூலம் பெரிய அளவில் முன்னேறிய மாதம்பட்டி ரங்கராஜ் சொந்த வாழ்க்கை பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இவர் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகளை பெற்றார்.
ஆனால் விவாகரத்து பெறாமல் மாதம்பட்டி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவரை மறுமணம் செய்ய அவர் கர்ப்பமாகவும் இருந்தார். தற்போது ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
கார்பன் காப்பி!
இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா தனது மகனின் கையை பிடித்திருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, 'அச்சு அசல் அப்பாவின் முகம்..ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ்.. ராகா ரங்கராஜ்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் புகைப்படம் இப்போது பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.
