ரஜினியை இந்த காரணத்துக்காக ஒதுக்கினாரா கமல்ஹாசன்! இயக்குனர் முத்துராமன்..

rajinikanth kbalachandar spmuthuraman kamahaasan
By Edward Dec 14, 2021 11:55 AM GMT
Report

70, 80, 90 களை தாண்டி தற்போது வரை முன்னணி நடிகர்களாக இருந்து கொண்டிருப்பவர்கள் ரஜினி - கமல். சூப்பர் ஸ்டாராகவும் உலகநாயகனாகவும் இவ்விருவரும் தற்போது வரை நண்பர்களாக இருந்து மிகப்பெரிய மார்க்கெட்டில் ஹிட் கொடுத்து வருகிறார்கள். இவர்கள் படம் தான் தமிழ் சினிமாவில் அதிக விற்பனை செய்யும் படங்களாக முன்னிலையில் இருந்து வருகிறது. அப்படி ஆரம்பகாலத்தில் இருந்து பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

16 வயதினிலே, அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள்உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தனர். ரஜினிகாந்தை வைத்து 25 படங்களை இயக்கிய பெருமை இயக்குநர் எஸ் பி முத்துராமன் அவர்களுக்கு உண்டு. 70 படங்களில் பாதி படத்தினை அவரை வைத்து இயக்கியுள்ளார் முத்துராமன். சமீபத்தில் கமல் ரஜினி குறித்து சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இயக்குனர் கே பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய கலைஞர்கள் எல்லாம், இரண்டாவதாக  படத்தில் தான் இருப்பாரகள்.

ஒரு படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க முத்துராமன் முடிவெடுத்திருக்கிறார். ஏவிஎம் புரொடக்‌ஷன் தயாரிப்பில் முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதேபோல் கமலிடம் சென்று கேட்டதற்கு அப்படியான படமா? வேண்டாம் பழசு என்று கூறினார். ஏன் மழுப்புகிறாய், என்ன காரணம் என்று கேட்டதற்கு, ரஜினியின் தற்போதைய நிலை மாறியுள்ளது. இனிமேலும் ஒன்றாக பணியாற்ற வேண்டாம் என்று கூறியுள்ளார் கமல். அவருக்கு ஒரு பாப்புலாரிட்டி எனக்கு ஒரு பாப்புலாரிட்டி என்று திரைப்படங்கள் அமைந்து வருகிறது அதனால் தான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். 

ஆனால் ஏவிஎம்க்கு நான் கண்டிப்பாக பண்ணுவேன் என்று கூறினார். பின் எட்டு வருடமாக இருவரும் ஒன்றாக நடிக்கவில்லை. அதன்பின் ரஜினிகாந்திற்காக தில்லு முள்ளு படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிகர் கமல் ஹாசன் நடித்து கொடுத்துள்ளார்.