என் தலைவி வந்துட்டாயா..! மீண்டும் விஜய் டிவியில் கண்ணம்மா
serial
bharathi kannama
roshini haripriyan
kannama
By Kathick
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த சீரியல் பாரதி கண்ணம்மா. இதில் கதாநாயகி கண்ணம்மாவாக நடித்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தீடீரென சீரியலில் இருந்து விலகினார்.
படங்களிலும், வெப் சீரிஸிலும் நடிக்கும் வாய்ப்புக்கு கிடைத்ததால் காரணமாகவே பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியுள்ளார் ரோஷினி. சீரியலில் இருந்து விலகி ரோஷினியால், அவரது ரசிகர்கள் கடும் சோகத்தில் இருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் விஜய் டிவிக்கு வந்துள்ளார் ரோஷினி. ஆம், விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக ரோஷினி கலந்துகொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. இதனால் ரோஷினியின் ரசிகர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவரை காண காத்துகொண்டு இருக்கிறார்கள்.