ஜோடியா போஸ் கொடுத்து வெறுப்பேற்றும் நடிகை நயன் தாரா!! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்..
தனுஷ் - நயன் தாரா
கோலிவுட்டை தாண்டி தற்போது பெரியளவில் பேசப்பட்டு வரும் விஷயங்களில் டாப் டாப்பிக்காக இருப்பது தனுஷ் - நயன் தாரா பிரச்சனை தான். இருவரும் மாறிமாறி வழக்கு தொடர்ந்து வந்த நிலையில், தனுஷ் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் பார்ட்டி, வேலை என்று இருந்து வருகிறார்.
ஆனால் நடிகை நயன்தாராவோ தினமும் ஏதாவது ஒரு பதிவினை பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
Happiness
தற்போது தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் ரொமாண்டிக் லுக்கில் எடுத்த புகைப்படத்தை #Happiness என்ற பேக்கிரண்ட் உடன் ஹார்ட் போஸ் காட்டி ஒரு பதினை பகிர்ந்திருக்கிறார்.
அந்த புகைப்படத்தில் இருவரும் வெள்ளை நிற ஆடையணிந்துள்ளனர். மேலும் தனது அன்பு காதல் மனைவிக்கு விக்னேஷ் சிவன் நெற்றியில் முத்தமும் கொடுத்திருக்கிறார். தற்போது இதனை பார்த்த நெட்டிசன்கள்,வெள்ளைக் கொடிக்கு வேலை வந்துவிட்டது என்று கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
— Nayanthara✨ (@NayantharaU) December 3, 2024