மன உளைச்சலுக்கு ஆளாகிய மகாலட்சுமி.. தொலைபேசி எண்ணை மாற்றியும்.. ஏமாற்றிய ரவீந்தர்..
ரவீந்தர் சந்திரசேகர் சொந்த காசில் மூன்று படங்களை தயாரித்தார். அந்த படங்கள் அனைத்தும் அவருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. சில தினங்களுக்கு முன்பு திடக்கழிவுகளில் மோசடி செய்ததாக ரவீந்தர் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ரவீந்தர் சந்திரசேகரன் மனைவி மகாலட்சுமி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு செய்தி வாசிப்பாளராக இருந்தார். அப்போதே பல பேர் அவரை ஜொள்ளு விட்டனர். திடீரென மகாலட்சுமி திருமணமான நபரை திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பல விமர்சகர்கள் மகாலட்சுமி வந்ததால் தான் இப்படியாகிவிட்டது என்று விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் கணவர் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் போது கூட போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ரவீந்தர் புழல் சிறையில் இருந்து ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும், ரவீந்தர் இதுபோன்ற பண மோசடி செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகவும், பல பிரபலங்களையும் இதேபோல் ஏமாற்றியிருக்கிறார்.
இந்த சம்பவத்தால் மனைவி மகாலட்சுமி மனஉளைச்சலில் இருப்பதாகவும் இதுகுறித்து திருமணத்திற்கு பின் இந்த விவகாரம் எதையும் மகாலடுமியிடம் சொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.
எதையும் கூறாமல் ஏமாற்றி திருமணம் செய்து நம்பி காதலித்து திருமணம் செய்த மகாலட்சுமியை அம்போவென்று விட்டுவிட்டார்.