ஒரு புது கார் வாங்கினது குத்தமா!! நடிகை மமிதா பைஜு வேதனை
மமிதா பைஜு
தென்னிந்திய சினிமா ரசிகர்களை கடந்த சில மாதங்களுக்கு முன் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தவர் தான் நடிகை மமிதா பைஜு. அவர் சூர்யாவுடன் இணைந்து நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலும் அதற்காக மமிதா பைஜு போட்ட ஆட்டமும் செம ஹிட்டானது.

இப்போது உள்ள ரசிகர்களின் ஆசை நாயகியாக வலம் வரும் மமிதா பைஜு தற்போது ஒரு புதிய காரை வாங்கியுள்ளார். நடிகை மமிதா பைஜூ அண்மையில் Volkswagen Taigun என்கிற கார் வாங்கியுள்ளார். இந்த காரின் விலை ரூ. 40 லட்சம் என தகவல் வெளியாகியுள்ளது.
புது கார் வாங்கிய விவகாரத்தை பலரும் சோசியல் மீடியாக்களில் விமர்சித்து பேசி வந்தனர்.

கார் வாங்கினது குத்தமா
இதுகுறித்து மமிதா கூறுகையில், புது கார் வாங்கியது குற்றமா? அதை எதற்காக இப்படி பேசுபொருளாக்க வேண்டும். பிரபலங்கள் கார் வாங்குவது ஒன்றும் தவறில்லையே.
கடினமாக
உழையுங்கள், நீங்களும் என்னைவிட பெரிய கார்கூட
வாங்கலாம் என்று தன்னுடைய உழைப்பின் மூலம் புதிய கார்
வாங்கியதை விமர்சித்தவர்களுக்கு கேள்வியை
எழுப்பியிருக்கிறார் மமிதா பைஜு.