கணவர் மறைவுக்கு பின் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனா.. வைரலாகும் வீடியோ..
90ஸ் கிட்களின் கனவுக்கன்னியாக இருந்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மீனா. குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த மீனா 2009ல் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த மீனா, கடந்த ஆண்டு வெளியான அண்ணாத்த படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்து மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் மீனாவின் கணவர் நுரையீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புறாக்களின் எச்சம் கலந்த காற்றால் அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்த சம்பவம் தமிழ் திரையுலகை அதிர்ச்சியடைய வைத்தது.
சுவாச பிரச்சனைக்காக தன் கணவர் மரணமடைந்ததால் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு அளிக்கும் வண்ணம் உடல் உறுப்பு தானம் செய்ததாகவும் கூறினார்.
கணவர் இறந்த துக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ள மீனா தன் சினிமா தோழிகளான ராதிகா, குஷ்பு, சங்கீதா, கலா மாஸ்டர் உள்ளிட்டவர்களுடன் அவுட்டிங், டின்னர் என்று சென்று வருகிறார்.
தற்போது போட்டோஷூட் பக்கம் சென்றுள்ள மீனா சமீபத்தில் எடுத்த மாடர்ன் போட்டோஷூட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.