செல்பி எடுக்க நடிகையிடம் அத்துமீறிய நபர்கள்.. ஷாக்கிங் வீடியோ வைரல்
நாகினி சீரியல் மூலமாக பாப்புலர் ஆனவர் மௌனி ராய். தமிழ் நாட்டிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருக்காகவே நாகினி சீரியல் பார்த்தவர்கள் ஏராளம் என சொல்ல தெரிய வேண்டியதில்லை.
தற்போது பாலிவுட் படங்களில் நடிப்பதில் மட்டும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டு வரும் படுக்கவர்ச்சியான புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் வைரல் ஆவதையும் பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் தற்போது மௌனி ராய் மும்பையில் உள்ள ஒரு டப்பிங் ஸ்டுடியோவுக்கு சென்றபோது வெளியில் இருந்த அவரது ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க போட்டிபோட்டுக்கொண்டு அருகில் சென்று இருக்கின்றனர்.
ஒருவர் அவரை தொட்டு இழுத்து செல்பி எடுக்க முயற்சித்து இருக்கிறார். மௌனி ராய் ஷாக் ஆனது அவரது ரியாக்ஷனிலேயே தெரிகிறது. இருப்பினும் அவர் செல்பி எடுப்பவர்களுக்கு அவர் போஸ் கொடுத்துவிட்டு தான் சென்று இருக்கிறார். வைரல் ஆகும் வீடியோ இதோ..