விஜய் டிவி காலை வாரிய நடிகை! பிக் பாஸ் தொடக்க விழாவில் இப்படி செஞ்சிட்டாரே
By Parthiban.A
விஜய் டிவி
விஜய் டிவி இன்னும் 100 நாட்களுக்கு பரபரப்பாகவே இருக்க போகிறது. அதற்கு காரணம் பிக் பாஸ் ஆறாவது சீசன் தொடங்கி இருப்பது தான்.
அதன் தொடக்க விழா இன்று ஞாயிறு மாலை 6 மணி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. அந்த பிரம்மாண்ட விழாவில் கமல் ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகப்படுத்தி வீட்டுக்குள் அனுப்பி வைக்க போகிறார்.
மொத்தம் 20 போட்டியாளர்கள் முதல் நாள் வீட்டுக்குள் செல்ல இருக்கிறார்கள்.
ஏமாற்றிய நடிகை
இந்நிலையில் ஒரே ஒரு நடிகை மட்டும் விஜய் டிவி காலை வாரி இருக்கிறார். மைனா நந்தினி தான் அது. அவர் பிக் பாஸ் செல்வதாக உறுதியான தகவல் வந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர் ஷோவில் வரவில்லை.
அவர் சில தினங்களுக்கு பிறகு பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.