எனக்கு 3வது.. அவருக்கு 4வது.. திருமணத்தை லிப்லாக் வீடியோவுடன் அறிவித்த நடிகை

Marriage
By Parthiban.A Jan 02, 2023 09:36 AM GMT
Report

சினிமா நடிகர் நடிகைகள் திருமணம் செய்கிறார்கள் என்றால் அது மிகப்பெரிய அளவில் பேசப்படும். அதே நேரத்தில் அவர்கள் பல முறை விவாகரத்து செய்து மீண்டும் திருமணம் செய்கிறார்கள் என்றால் இணையத்தில் எக்கச்சக்க ட்ரோல்கள் வரும்.

தற்போது அப்படி தான் ட்ரோல்களை சந்தித்து வருகிறார் அம்மா நடிகை பவித்ரா லோகேஷ். அவர் தெலுங்கு, தமிழ் சினிமாவில் எக்கச்சக்க படங்களில் அம்மா ரோலில் நடித்தவர்.

எனக்கு 3வது.. அவருக்கு 4வது.. திருமணத்தை லிப்லாக் வீடியோவுடன் அறிவித்த நடிகை | Naresh And Pavithra Lokesh To Marry Soon

எனக்கு 62.. அவருக்கு 44

தற்போது தெலுங்கு நடிகர் நரேஷ் என்பவரை பவித்ரா மூன்றாவதாக திருமணம் செய்ய இருக்கிறார். நரேஷுக்கு இது நான்காம் திருமணம் இது என்பது கூடுதல் தகவல்.

இதற்கு முன் நரேஷுடன் பவித்ரா தொடர்பில் இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த ஹோட்டலில் நரேஷின் முன்னாள் மனைவி வந்து பிரச்சனை செய்து செருப்பால் அடிக்க வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது 44 வயதாகும் பவித்ராவும் 62 வயதாகும் நரேஷும் ஒரே வீட்டில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வசித்து வருகிறார்கள். விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக லிப் லாக் வீடியோ வெளியிட்டு அறிவித்து உள்ளனர்.