ஹனிமூன் உட்பட நயன்தாராவுக்காக சகலமும் ரெடி! குஷியில் விக்னேஷ் சிவன்

Nayanthara Vignesh Shivan
1 மாதம் முன்
Edward

Edward

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா பல காதல் தோல்விகளுக்கு பிறகு விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். 7 வருடங்களாக இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

எப்போது திருமணம் செய்வீங்க என்று ரசிகர்கள் பல ஆண்டுகளாக கேட்டு வந்தனர். அமைதியாய் இருவரும் நாடுவிட்டு நாடாக சுற்றியும் ஜோடியாக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வந்தனர். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து ஏகே61 படத்தினை இயக்கவும் நயன் தாரா அடுத்தடுத்த பாலிவுட், கோலிவுட் படங்களில் நடிக்கவுள்ளதால் வரும் காலங்களில் இருவரும் பிஸியாகிவிடுவார்கள்.

அதற்காக நயன் தாரா கல்யாணத்திற்கு ஓகே கூறி ஜூன் 9 ஆம் தேதி என்ற நாளையும் குறித்துள்ளாரான். பிரம்மாண்டமாக இல்லாமல் எளியமுறையில் திருப்பதி கோவிலுக்கு அருகில் இருக்கும் மடத்தில் திருமணம் செய்யவுள்ளனர்.

கல்யாணத்திற்கு ஒருசில நெருங்கியவர்களை மட்டும் நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் அழைத்திருக்கிறார்களாம். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறதாம்.

கல்யாணம் முடிஞ்சதும் பல வெளிநாடுகளை தேர்வு செய்து ஹனிமூன் டூர் வரை செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து விட்டதாம். இதனால் விக்னேஷ் சிவன் குஷி சந்தோஷயத்தில் இருந்து வருகிறாராம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.