கடைசி வரை அம்மா முகத்தை காட்டாத மூர்த்தி! மயானத்தில் கதறி அழும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்..வீடியோ

தொலைக்காட்சி தொடரில் மக்களில் பெரும் ஆதரவை பெற்று 3 ஆண்டுகளுக்கும் மேல் ஒளிப்பரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். அண்ணன் தம்பியின் பாசக்கதையாக எடுத்து வரும் இந்த சீரியலில் சமீபத்தில் வீட்டை எதிர்த்து கண்ணன் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்கிறார்.

அதனால் வீட்டினை விட்டு வெளியே துறத்தி விடுகிறார்கள். இதையடுத்து லட்சுமி அம்மா உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பலனின்றி இறப்பதாக காட்சிகள் அமைந்து வருகிறது. இந்நிலையில் அம்மா இறந்த செய்தி வெளி ஊருக்கு சென்ற கண்ணனுக்கு தெரியாமல் இருக்க, திரும்ப வரும் போது போஸ்டரை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே வீட்டிற்கு சென்று ஐஸ்வர்யாவிடம் கேட்டு மயானத்திற்கு ஓடுகிறார். கண்ணன் வருவதற்கு முன்பே அம்மாவை எறித்து விடுகிறார்கள். இதை பார்த்து விழுந்து கதறி கதறி கண்ணன் அழும் காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்