ரூ. 1.75 கோடி காரில் வந்த நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை..வைரல் வீடியோ..

Mercedes Bollywood Indian Actress Priyanka Chopra
By Edward Feb 14, 2025 11:30 AM GMT
Report

பரினீதி சோப்ரா

உலகம் முழுக்க கொண்டாடப்படும் இந்திய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் பாலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து இந்திய முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.

அவரை போலவே அவரது உறவினராக இருந்து இந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை பரினீதி சோப்ரா. முன்னணி நடிகையாகவும் பாடகியாகவும் திகழ்ந்து வரும் பரினீதி சோப்ராவின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

ரூ. 1.75 கோடி காரில் வந்த நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை..வைரல் வீடியோ.. | Parineeti Chopra Spotted Mercedes Benz Gls Car

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ்

அதில் பரினீதி சோப்ரா, விலையுயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரில் வந்திறங்கியிருக்கிறார். இதன் ஆன் ரோட் விலை 1.75 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த காரில் டீசல் வேரியண்ட்கள் அடங்கியுள்ளது.

ஏற்கனவே பரினீதி சோப்ரா, ஜாகுவார் எக்ஸ்ஜேஎல், ஆடி க்யூ7, ஆடி க்யூ4 இ-ட்ரான், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் கார்கள் வைத்துள்ளார். மேலும் 36 வயதாகும் பரினீதி சோப்ராவின் நிகர சொத்து மதிப்பு ரூ. 74 கோடி என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.