பைக்ல போனா தான பிடிப்பீங்க.. காரில் போன TTF வாசனுக்கு போலீஸ் வெச்ச ஆப்பு
டிடிஎப் வாசன்
யூடியூபர் டிடிஎப் வாசனை பற்றி சமீபகாலமாக பலவேறு சர்ச்சைகள் வருவதை பார்த்திருப்பீர்கள். சாலையில் ஏடாகூடமாகவும் அதிவேகமாகவும் பைக் ஓட்டி அதை வீடியோ எடுத்து வெளியிட்டு, இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருந்து வரும் டிடிஎப் வாசனை ஏன் கைது செய்யவில்லை என தொடர்ந்து பொதுமக்களும் கேட்டு வருகிறார்கள். போலீசும் அவரை பல முறை எச்சரித்து இருக்கிறது.
அது மட்டுமின்றி அவ்வப்போது fans மீட் என கூட்டத்தை கூட்டும் TTF-ஐ நம்பி வந்து போலீசிடம் அடிவாங்கி சென்றனர் அவரது followers.
கார் பறிமுதல்
கார் பறிமுதல் பைக்ல போனா தான பிடிப்பீங்க, இந்த முறை காரில் போறேன் என்ன பண்ணுவீங்க.. என சென்னை கமலா தியேட்டருக்கு சொகுசு காரில் வந்திருக்கிறார் TTF வாசன். ஆனால் அப்போதும் போலீஸ் ஒரு பெரிய ஷாக் கொடுத்து இருக்கிறார்கள்.
அந்த காரில் நம்பர் பிளேட் இல்லை என சொல்லி போலிசார் பறிமுதல் செய்து இருக்கிறார்கள். ஆனால் அது என் கார் இல்லை, என் நண்பனின் கார் என சொல்லி சமாளித்து இருக்கிறார் TTF வாசன்.
இருப்பினும் ஆவணத்தை சமர்ப்பித்து காரை எடுத்து செல்லும்படி போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள்.