இந்த கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷா? அதுவும் ஜெயம் ரவிக்கா!

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் என்ற நாவல் படத்தினை இயக்கி வருகிறார். பல முன்னணி நடிகர் நடிகைகள் இணைந்து பல கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் இப்படத்தில்.

கதாபாத்திரத்தில் எந்தெந்த பிரபலங்களை நடிக்க வைக்கலாம் என்ற தேர்வு முடிந்து அவரவர்கள் நடித்துக்கொடுத்து வருகிறார்கள். சில கதாபாத்திரங்களின் பெயர்களும் இணையத்தில் கசிந்து வருகிறது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னியின் செல்வன் நாவலை பொருத்தவரையில் மிகவும் வலிமையுடைய கதாபாத்திரமாக கருதப்படுவது குந்தவை கதாபாத்திரம்.

இதற்கு பொருத்தமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ் தான் இருப்பார் என்று கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதை சிலர் போலியாக புகைப்படங்களை வெளியிட்டும் வந்தனர்.

அதை படக்குழு போலியானது என்று கூறி விளக்கமளித்தனர். குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும், குந்தவை ஜோடி வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தியும், குந்தவையின் சகோதரர் ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவியும் நடிக்கவுள்ளார்கள். அதாவது ஜெயம்ரவிக்கு அக்காவாக இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளாராம்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்