முதல் படத்திலேயே அந்தமாதிரி காட்சிகள்! தயாரிப்பாளர்களிடம் புலம்பும் டாக்டர் பட நடிகை...

சினிமா நடிகைகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் போது அது எப்படிபட்ட கதாபாத்திரமானாலும் நடித்து கொடுத்துவிடுவார்கள். அதிலும் முதல் படத்தில் எப்படியாவது ரசிகர்களை ஈர்க்கவேண்டுமென்பதற்காக அந்தமாதிரி காட்சிகளிலும் நடிக்க தாராளம் காட்டுவார்கள்.

தற்போது ஏன் அப்படி நடித்தேன் என்று கூறி புலம்பி வருகிறார் டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது டாக்டர் படம். அதிலும் நடிகை பிரியங்கா மோகனின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் டாக்டர் படம் அவருக்கு முதல் படம் என்று கூறி வரும் நிலையில் அது அவரது முதல் படம் கிடையாதாம்.

டிக்டாக் என்ற படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் இன்னும் அப்படம் வெளியாகாமல் டாக்டர் படம் வெளியாகியுள்ளதாம். அப்படத்தில் பிரியங்கா மோகன் அதிகப்படியான கவர்ச்சியில் நடித்துள்ளார். தற்போது பிரியங்கா மோகனுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால் இப்படத்தை வெளியிட்டால் கண்டிப்பாக கல்லா கட்ட முடியும் என நினைத்து தயாரிப்பாளர் அடுத்ததாக டிக் டாக் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்.

இதனைக் கேட்ட பிரியங்கா மோகன் உடனே தயாரிப்பாளருக்கும் போன் செய்து இப்பதான் சார் என் கேரியர் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் நான் கவர்ச்சியாக நடித்த படத்தை வெளியிட்டால் என்னுடைய இமேஜ் கெட்டுவிடும். அதன்பிறகு பெரிய வாய்ப்பு கிடைக்காது எனக் கூறி கண்ணீர் விட்டு புலம்பி வருகிறாராம்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்