3.6 கோடி பார்வையாளருக்கு சொந்தமான பாடகி! அக்காவும் இதுல லிஸ்ட்ல சேர்ந்துட்டாங்களாம்..
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். தன்னுடைய ஸ்டைலிஷ் நடிப்பை விட்டுவிட்டு சந்தனமரம் கடத்தலை மையமாக எடுத்த புஷ்பா படத்தில் நடித்து கொடுத்துள்ளார்.
இதுவரை இல்லாத அளவிற்கு இப்படம் சமந்தா குத்தாட்டத்தால் இரு மடங்கு மார்க்கெட்டை அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் படத்தில் ஊ அண்ட வா மாவா என்ற பாடலுக்கு நடிகை சமந்தா குத்தாட்டம் போட்டது தான். அப்படம் தெலுங்கில் மட்டும் 3.6 கோடி பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
எங்கு பார்த்தாலும் இப்பாடலுக்கான மீம்ஸ்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்பாடல் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற 5 மொழிகளில் பெரிய ஹிட் கொடுத்து வருகிறது.
அந்தவகையில் தெலுங்கு சினிமாவில் சிறு வயதில் பாடகியாக இருந்து டிஎஸ்பி கொடுத்த வாய்ப்பால் இப்பாடலை பாடி ஈர்த்து வருபவர் இந்திரவதி. தெலுங்கு இந்திரவதி என்றால் கன்னட மொழியில் அவரது சகோதரி பாடகி மாங்கிளி பாடியுள்ளார். அவர்களின் சமீபத்திய வீடியோ வைரலாகி வருகிறது.