சன் டிவியில் இருந்து வேறு சேனலுக்கு தாவிய ராதிகா! புது சீரியல் பெயர் இதுவா?
By Parthiban.A
நடிகை ராதிகா ஒருகாலத்தில் தமிழில் பிரபல ஹீரோயினாக இருந்தவர். தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவர் சன் டிவியில் சித்தி 2 தொடரில் நடித்து வந்த நிலையில் அதில் இருந்து வெளியேறினார். தான் இனி திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்த போவதாக கூறினார்.
இந்நிலையில் தற்போது ராதிகாவின் ராடான் நிறுவனம் கலைஞர் டிவிக்காக ஒரு புது சீரியல் எடுத்து வருகிறதாம்.
பொன்னி என அந்த தொடருக்கு பெயர் வைத்து இருக்கிறார்கள் என்றும், ராதிகா அதில் ஒரு ரோலில் நடிக்க போகிறார் என்றும் தற்போது தகவல் பரவி வருகிறது.
இருப்பினும் இந்த சீரியல் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் ராதிகா அதில் நடிக்கிறாரா அல்லது தயாரிக்கமட்டும் செய்கிறாரா என்பது உறுதியாக தெரியவரும்.