குறையை செளந்தர்யா மகன் மூலம் தீர்த்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்.. இப்படியொரு பேரா!!

Rajinikanth Aishwarya Rajinikanth Soundarya Rajinikanth
By Edward Sep 13, 2022 09:20 AM GMT
Report

கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து லதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரஜினிகாந்த் திருமணமாகி செளந்தர்யா, ஐஸ்வர்யா என்ற இரு மகள் இருக்கிறார்கள். மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷுக்கு 2004 ல் திருமணம் செய்து வைத்தார்.

குறையை செளந்தர்யா மகன் மூலம் தீர்த்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்.. இப்படியொரு பேரா!! | Rajini Daughter Soundarya Baby Shower And Name

நான்காவது பேரன்

அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர். ஐஸ்வர்யாவுக்கு பின் அஸ்வின் என்பவருக்கு 2010ல் திருமணம் செய்து வைத்தார் ரஜினிகாந்த்.

7 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் வேத் என்ற மகனை பெற்றார் செளந்தர்யா. இருவருக்கும் விவாகரத்தாகிய நிலையில் கடந்த 2019ல் விசாகன் வணங்கா முடி என்பவரை திருமணம் செய்து கொண்டார் செளந்தர்யா.

மூன்று வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் கர்ப்பமாகிய செளந்தர்யா சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். கர்ப்பமாகிய போது மகளுக்கு வளைகாப்பு நடத்திப்பார்க்க ஆசைப்பட்டுள்ளார் ரஜினிகாந்த். பின் சிம்பிளாக வீட்டிலேயே நடத்திருக்கிறார்.

குறையை செளந்தர்யா மகன் மூலம் தீர்த்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்.. இப்படியொரு பேரா!! | Rajini Daughter Soundarya Baby Shower And Name

பேரனின் பெயர்

இந்நிலையில் ரஜினிகாந்த் தன் நான்காவது பேர செளந்தர்யா - விசாகன் குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்று பெயரை வைத்துள்ளார். மூன்று பேரன்களுக்கும் தன்னுடைய பெயரை வைக்க முடியாத நிலையில் செளந்தர்யாவின் இரண்டாம் மகன் மூலம் ஆசையை தீர்த்துக்கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.