ரஜினி முன்னாள் சூப்பர்ஸ்டாரா? பத்திரிகையாளர் வீட்டுக்கு சென்று ரசிகர்கள் சண்டை
ரஜினிகாந்த் என்னதான் 72 வயதிலும் தொடர்ந்து ஹீரோவாக நடித்து கொண்டிருக்கிறார் என்றாலும் அவரால் விஜய் போன்ற அடுத்த தலைமுறை ஹீரோக்களை தற்போது பாக்ஸ் ஆபிசில் ஓவர்டேக் செய்யமுடியவில்லை என்கிற கருத்து தான் நிலவி வருகிறது.
விஜய் தற்போது நடித்து இருக்கும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், "விஜய் தான் தற்போதைய சூப்பர்ஸ்டார், நான் சூர்யவம்சம் பட விழாவிலேயே விஜய் பற்றி பேசி இருக்கிறேன்" என பேசியது வைரல் ஆனது.

முன்னாள் சூப்பர்ஸ்டார் ரஜினி
மேலும் விஜய் தான் தற்போது சூப்பர்ஸ்டார், ரஜினியை வேண்டுமானால் 'முன்னாள் சூப்பர்ஸ்டார்' என சொல்லிக்கொள்ளலாம் என பத்திரிகையாளர் பிஸ்மி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
இதை கேட்டு கோபமாக ரஜினி ராசிகாஸ் நேராக அவரது வீட்டுக்கு சென்று சண்டை போட்டிருக்கிறார்கள். அவரும் சளைக்காமல் 'நான் இருப்பதாய் தான் சொன்னேன், நாளைக்கு ஜெயிலர் படம் அதிகம் வசூலித்தால், அதை பற்றி பெருமையாக பேசுவேன்' என பதிலடி கொடுத்து இருக்கிறார்.
ரசிகர்கள் பிஸ்மி வீட்டில் வாக்குவாதம் செய்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
— Karthik Ravivarma (@Karthikravivarm) January 1, 2023