முட்டுக்கட்டை போட்ட தனுஷ், சிவகார்த்திகேயன்!! ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கு வேறொரு செக் வைத்த லவ்வர்..
நீண்ட வருடங்களுக்கு பின் அதுவும் தனுஷை பிரிந்த பின் இயக்கத்தில் அதிக ஈடுபாடுடன் இருந்து வருகிறார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்து லால் சலாம் என்ற படத்தினை இயக்கிவிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
கவுரத்தோற்றம் என்றாலும் ரஜினிகாந்த் சுமார் 1 மணி நேரம் வரை நடிக்கவிருக்கிறாராம். இப்படம் பொங்கல் அன்று வெளியாகவிருந்த நிலையில் படத்தின் சில காட்சிகள் மிஸ் ஆகிவிட்டதாகவும் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் வெளியாவதாலும் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

தற்போது லால் சலாம் படம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன், தனுஷ் எப்படி ஐஸ்வர்யாவின் லால் சலாமுக்கு செக் வைத்தார்களோ, அதேபோல் நடிகர் மணிகண்டன் படமும் செக்காக அமைந்துள்ளது.
பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ள லவ்வர் படமும் வரும் 9 ஆம் தேதி வெளியாகவிருக்கிறதாம். ஏற்கனவே மணிகண்டன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் குட் நைட் கடந்த ஆண்டின் சிறந்த படமாகவும் இருந்தது.
அதேபோல் மணிகண்டன் படமான லவ்வர் படத்தின் டீசர் கலக்கலாக இருந்தது. இதை ஐஸ்வர்யா சாதாரணமாகவும் எடுத்துக்கொள்ளகூடாது என்று சினிமா விமர்சகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
எப்படியாக இருந்தாலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வித்தியாசமாக இயக்கி இருக்கும் லால் சலாம் படத்தை நாங்கள் தியேட்டரில் பார்க்க தயார் என்று தலைவர் ரசிகர்களும் ஆறுதலான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.