மகள் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரம்பா.. அழகிய குடும்ப புகைப்படம்
சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்பா.
இதன்பின் செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, அன்புடன், ஆனந்தம், மிலிட்டரி, 3 ரோஸஸ் என தமிழ் படங்கள் குவிந்தது. நடிகை ரம்பாவிற்கு இந்திர குமார் பத்மநாதன் என்பவருடன் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த அழகிய தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில், நடிகை ரம்பா பிறந்தநாள் கொண்டாட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அவரது மூத்த மகளின் 13வது பிறந்தநாளைதான் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்ய ரசிகர்கள் ரம்பா மகளுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..