நடிகை ரம்யா கிருஷ்ணனின் அம்மாவை துப்பாக்கியால் சுட்ட கே.எஸ். ரவிக்குமார்..

Ramya Krishnan
By Kathick Sep 16, 2022 08:15 AM GMT
Report

ரம்யா கிருஷ்ணன்

நடிகை ரம்யா கிருஷ்ணனின் தாயார் மாயாவை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் சில தினங்களாக வைரலாகி வருகிறது. நடிகர் நாகேஷ் இயக்கத்தில் 1985ஆம் ஆண்டு உருவான திரைப்படம் 'பார்த்த ஞாபகம் இல்லையோ'. இப்படத்தில் ஆனந்த் பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

நடிகை ரம்யா கிருஷ்ணனின் அம்மாவை துப்பாக்கியால் சுட்ட கே.எஸ். ரவிக்குமார்.. | Ramya Krishnan Mother Shot By Ravikumar

இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார் துணை இயக்குனராக நாகேஷிடம் பணிபுரிந்துள்ளார். இந்த படத்தின் ஒத்திகை நாகேஷின் வீட்டில் நடந்துள்ளது. அப்போது நாகேஷின் இளைய மகனுடன் கே. எஸ். ரவிக்குமார் பொம்மை துப்பாக்கி ஒன்றில் ஈயத்தால் செய்த புல்லட்டை கொண்டு குறிவைத்து சுட்டுக்கொண்டு இருந்திருக்கிறார்.

துப்பாக்கியால் சுட்ட இயக்குனர்

அப்போது ரம்யா கிருஷ்ணனின் தாயார் தனது கையை சரியாக குறி வைத்து சுடும்படி கூறியுள்ளார். கே.எஸ். ரவிக்குமாரும் அதை செய்து துப்பாக்கியால் சுட்டுருக்கிறார். ஆனால், குறி தவறி ரம்யா கிருஷ்ணனின் தாயார் தோள்பட்டையில் சுட்டுவிட்டது. இதை பார்த்த பதறிப்போன நடிகர் ஆனந்த் பாபு உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வைத்துள்ளார்.

நடிகை ரம்யா கிருஷ்ணனின் அம்மாவை துப்பாக்கியால் சுட்ட கே.எஸ். ரவிக்குமார்.. | Ramya Krishnan Mother Shot By Ravikumar

ஆழமாக பாய்ந்த அந்த புல்லட்டை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்துள்ளார்கள். இதன்பின் அவர் நலமாகியுள்ளார். இந்த சம்பவம் தான் தற்போது மீடியா மத்தியில் தீடீரென வைரலாகி வருகிறது.