அந்த மாதிரி காட்சியில் நடிக்க அதை செய்வேன்!! நடிகை ரம்யா பாண்டியன் சொன்ன விஷயம்..
சோசியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன், டம்மி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். குக் வித் கோமாளி சீசன் 1ல் கலந்து கொண்டு 2வது ரன்னர் அப் இடத்தை பிடித்தார்.

அதன்பின் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு 3வது ரன்னர் அப்பும், பிக்பாஸ் அல்டிமேட் 1ல் கலந்து கொண்டு 2வது ரன்னர் அப் இடத்தையும் பிடித்தார். கடந்த 2024ல் யோகா பயிற்சியாளர் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ரொமான்ஸ் காட்சி
சமீபத்திய பேட்டியொன்றில், ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றாலே எனக்குள் பயம் வந்துவிடும். ரொம்பவே நர்வஸ் ஆகிவிடுவேன். எவ்வளவு அழுகின்ற காட்சியாக இருந்தாலும் சரி, ரோட்டில் உருண்டு புரளும் காட்சியாக இருந்தாலும் சரி, காட்டுக்குள் நடக்கும் சீனாக இருந்தாலும் சரி. எதற்குமே நான் யோசிக்கவேமாட்டேன்.
எனக்கு பயமும் இருக்காது, ஆனால் ரொமான்ஸ் சீன், இண்டிமேட் காட்சிகளில் நடிக்கும்போது மட்டும் என் மனதிற்குள் பயம் வந்துவிடும். அந்த பயம் வெளியே தெரியக்கூடாது. நல்லபடியாக நடித்து முடிக்க வேண்டும் என்பதற்காக நான் சாமி எல்லாம் கும்பிடுவேன், ஆனால் அதுவும் நம்முடைய தொழிலில் ஒரு பகுதிதான்.

நாம் எந்த வேலைக்கு சென்றாலும், அதில் நமக்கு ஏதேனும் ஒரு விஷயம் பிடிக்காமல் இருக்கும். சினிமா மட்டுமல்ல, நீங்கள் எந்த வேலைக்கு சென்றாலும் அதில் பிடிக்காத ஒரு விஷயம் இருக்கத்தான் செய்யும், ஆனால் அந்த ஒரு சிறிய விஷயத்திற்காக ஒட்டுமொத்த வேலையையும் வேண்டாம் என்று நாம் விட்டிவிட்டு ஓடிவந்துவிட முடியாது. அதை எப்படி நாம் புத்திசாலித்தனமாக கையாள வேண்டும்.

நோ - எஸ்
எப்படி முன்னேற வேண்டும் என்பதை நாம் தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அதற்காக நம் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை, நீங்கல் செய்யும் வேலைகளில் ஈகோவை காட்டத்தேவையில்லை, ஆனால் இந்த விஷயம் நமக்கு வேண்டாம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
ஒரு கதையில் இயக்குநர் சொல்லும்போதே உங்களுக்கே நன்றாக புரியும்,உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் தயங்காமல் 'நோ' சொல்லிவிடுங்கள். வாழ்க்கையில் எவ்வளவு விஷயங்களுக்கு 'எஸ்' சொல்கிறோமோ, அதேபோல் வேண்டாம் என்ற இடத்தில் உறுதியாக 'நோ' சொல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார் ரம்யா பாண்டியன்.